உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முதியோருக்கு இலவச வேட்டி சேலை

முதியோருக்கு இலவச வேட்டி சேலை

கோவை: தமிழக அரசு சார்பில், முதியோர் ஓய்வூதிய திட்ட பயனாளிகளுக்கு தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைக்கு இலவசவேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில், இலவச வேட்டி சேலை பெரும் பயனாளிகள் 1.77 லட்சம் பேர் உள்ளன. கடந்த ஆண்டு, 59 ஆயிரத்து 371 சேலைகள், 19 ஆயிரம், 769 வேட்டிகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு தீபாவளிக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட உள்ளன. மாவட்ட வழங்கல் அலுவலர் விஸ்வநாதன் கூறுகையில், ''கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் முதியோர் பென்ஷன் பெறும் பயனாளிகளுக்கு, ரேஷன்கடைகளில் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்படுகின்றன. தேவையான அளவுக்கு வேட்டி, சேலைகள் கையிருப்பு உள்ளன. பயனாளர்கள் பொருட்கள் வாங்கும் ரேஷன் கடைகளில், வேட்டி, சேலை வாங்கிக் கொள்ளலாம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை