உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கண் சிகிச்சை இலவச முகாம்

கண் சிகிச்சை இலவச முகாம்

பெ.நா.பாளையம்; கோவில்மேடு மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் கண் சிகிச்சை முகாம் இலவச நடந்தது.மக்கள் பணியாளர் வில்வம் நினைவாக, கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, விநாயகா பில்டர்ஸ், சமூக செயற்பாட்டு களம் ஆகியன இணைந்து, இலவச கண் சிகிச்சை முகாமை, வேலாண்டிபாளையம் கோவில் மேடு, மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நடத்தியது. முகாமில், 147 பேர் கலந்து கொண்டனர். இதில், பரிசோதனைக்கு பிறகு, 21 நபர்கள் கண் அறுவை சிகிச்சைக்காக அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முகாமில், 46 பேர்களுக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை