உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 52 குழந்தைகளுக்கு இலவச மருந்துகள்

52 குழந்தைகளுக்கு இலவச மருந்துகள்

கோவை; டைப் 1 சர்க்கரையால் பாதிக்கப்பட்ட 52 குழந்தைகளுக்கு, இரண்டு வருடங்களுக்கு தேவையான மருந்துகளை, இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ரோட்டரி இன்டர்நேஷனல் அமைப்பின் கீழ், அங்கம் வகிக்கும் ரோட்டரி கோயமுத்துார் கேலக்ஸி அமைப்பு,பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருகட்டமாக, இந்த அமைப்பு சார்பில், கோவையில் டைப் 1 சர்க்கரையால் பாதிக்கப்பட்ட 52 குழந்தைகளுக்கு, இரண்டு வருடங்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மூன்று குழந்தைகளுக்கு பம்ப் வழங்கப்பட்டுள்ளது.இதயங்கள் அறக்கட்டளை வாயிலாக, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கும்நிகழ்ச்சி, கோவை காளப்பட்டியில் உள்ள மதுரம் டயாபடிக் மற்றும் தைராய்டு சென்டரில் நடந்தது.ஆர்.ஐ.டி. 3201 மாவட்ட கவர்னர் சுந்தரவடிவேலு, மாவட்ட கவர்னராக அடுத்து பொறுப்பு வகிக்கவுள்ள செல்லா ராகவேந்திரன், முன்னாள் கவர்னர் ராஜசேகர், சர்க்கரை மருத்துவ நிபுணர் கிருஷ்ணன் சாமிநாதன் உட்படபலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை