உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மறு ஆலோசனை முகாம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மறு ஆலோசனை முகாம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மறு ஆலோசனை வழங்கும் முகாம், கே.எம்.சி.எச்.,ல் ஜூன் 2 முதல் 30ம் தேதி வரை நடக்கிறது.கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது:புற்றுநோய் அறிகுறி தெரிந்தால், பயம் தொற்றிக்கொள்கின்றது. எந்த புற்றுநோயாக இருந்தாலும், ஏன், எதனால், எப்படி பாதிப்பு வந்தது என தெரிந்து கொள்ள கடும் முயற்சி எடுக்கின்றனர்.டாக்டர் புற்றுநோய் உள்ளதாக உறுதி செய்தால், அதற்கான சான்று சரியானதா என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு தற்போது மக்களிடம் ஏற்பட்டுள்ளது. பலர் இதுகுறித்து இணையதளங்களில் தேடுகின்றனர். இதில், பல்வேறு பதில்கள், விளக்கங்களால் குழப்பம் ஏற்படலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான புற்றுநோய் பாதிப்பு இருக்கலாம். அவற்றுக்கு ஒரே மாதிரியான விளக்கங்கள் பொருந்தாது.ஒரு டாக்டர் கூறியபின், மற்றொரு டாக்டரிடம் ஆலோசனை கேட்பது நல்லதுதான். இரண்டாவது ஆலோசனை அனைத்து நோய்களுக்கும் கேட்கலாம். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டாவது ஆலோசனை பெற, எந்த மருத்துவமனைக்கு செல்வது, எந்த டாக்டரை பார்ப்பது என்ற குழப்பம் ஏற்படலாம்.இதற்கு தீர்வு தரும் வகையில், கே.எம்.சி.எச்.,ல் இதற்கான இலவச ஆலோசனை முகாம், ஜூன் 2ம் தேதி முதல், ஜூன் 30ம் தேதி வரை நடக்கிறது. முகாமில் மேற்கொண்டு பரிசோதனை தேவைப்பட்டால், பரிசோதனையை சலுகை கட்டணத்தில் மேற்கொள்ளலாம்.எனவே, ஒளிவு மறைவு இல்லாத தெளிவான நிலையை அறிந்து கொள்ளவும், உறுதி செய்யவும் இரண்டாவதாக (செகன்ட் ஒபீனியன்) ஒரு டாக்டரை பார்த்து அறிந்து கொள்வது அவசியம். புற்றுநோய் பற்றிய சோதனை முடிவுகள், டாக்டர்களின் பரிந்துரை ஆகியவற்றுடன் கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் டாக்டரையும் ஒருமுறை பாருங்கள்.முன்பதிவு மற்றும் மேலும் விவரங்களுக்கு, 87548- 87568 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !