ஆடு வளர்க்க இலவச பயிற்சி
கோவை; சரவணம்பட்டி கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், வரும் 23ம் தேதி ஆடு வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில், ஆடு வளர்ப்பு முறை, கொட்டகை மற்றும் பரணி வளர்ப்பு, ஆடு ரகங்கள், உணவு மற்றும் நோய் மேலாண்மை, தடுப்பு மருந்துகள், மழை நேர பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தும் பயிற்றுவிக்கப்படும். ஆர்வமுள்ளவர்கள், 0422-2669965 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, பெயரை பதிவு செய்து கொள்ளலாம். காலை, 10:30 முதல் மாலை, 5:00 மணி வரை பயிற்சி நடைபெறவுள்ளது. இத்தகவலை, கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி ஆராய்ச்சி நிறுவன தலைவர் ஆறுமுகம் தெரிவித்தார்.