பட்டம் நிகழ்ச்சிக்கு இலவச வாகன வசதி
நவ இந்தியா சிக்னலில் இருந்து, இந்துஸ்தான் கல்லூரி வரை மாணவர்களை அழைத்து வர, இலவச வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.மாணவர்கள் அதிக அளவில் வருகை புரிந்ததால், நெரிசலைத் தவிர்க்க, தனித்தனி வரவேற்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன.பங்கேற்பாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பார்வையாளர்கள் அனைவருக்கும் ஐ.டி.சி., நிறுவனத்தின் 5 விதமான தின்பண்டங்கள், குடிநீர் பாட்டில், 'தினமலர்' நாளிதழ் காலண்டர் அடங்கிய பை வழங்கப்பட்டது. போட்டியாளர்களுக்கு எழுத்துத் தேர்வுக்கு வசதியாக, தேர்வு அட்டை, டோம்ஸ் நிறுவனத்தின் எழுதுபொருட்கள் இலவசமாக வினியோகிக்கப்பட்டன. இறுதிப்போட்டியின்போது, பார்வையாளர்களாக இருந்த மாணவர்களுக்கும், அரையிறுதி வரை முன்னேறிய மாணவர்களுக்கும் கேள்விகள் கேட்கப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் காலை சிற்றுண்டி, தேநீர், மதிய உணவு வழங்கப்பட்டது.