இலவச தொழில் பயிற்சி; மாணவர்கள் பங்கேற்கலாம்
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் கோடைகால இலவச தொழில் பயிற்சி வகுப்புகள் துவங்குகின்றன.பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனமான தேசிய மனித மேம்பாட்டு மையம், பல்வேறு இலவச பயிற்சிகளை வழங்கி வருகிறது. தற்போது, கோடை காலத்தையொட்டி வீட்டு மின்சாரங்கள் பழுதுபார்த்தல் ஒரு மாதம் இருபாலருக்கும், அன்றாட உபயோக சாதனங்கள் இயக்குதல் மற்றும் பராமரித்தல் (வீட்டு மின் சாதனங்கள், ஏ.சி., இருசக்கர வாகனங்கள், பெட்ரோல் மற்றும் பேட்டரி வாகனங்கள், மொபைல் போன்) இருபாலாருக்கும். இது தவிர, தையல் பயிற்சி ஒரு மாதம், ஆரி எம்பிராய்டரி ஒரு மாதம், கைவினைப் பொருட்கள் தயாரித்தல் ஒரு வாரம் ஆகியவை பெண்களுக்கு வழங்கப்படுகின்றன. பயிற்சிகள் சிறந்த வல்லுனர்களைக் கொண்டு அளிக்கப்படுகிறது. இத்துடன் வாழ்க்கை கல்வி பயிற்சியும் வழங்கப்படும். பயிற்சியை முழுமையாக நிறைவு செய்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். சுய தொழில் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு அரசு சலுகைகள் மற்றும் வங்கி கடன் பெற ஆலோசனை வழங்கப்படும். சுயதொழில் செய்ய விரும்பும் பெண்கள், இளைஞர்கள், கோடை விடுமுறையில் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். பயிற்சியில் சேர விரும்புவோர், ஆதார் கார்டு நகல், படிப்பு சான்றிதழ் நகல் மற்றும், 2 பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் உடனடியாக விண்ணப்பிக்கவும். மேலும், விபரங்களுக்கு, 81223 22381 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை பயிற்சி மையத்தின் இயக்குனர் சகாதேவன் தெரிவித்தார்.