உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிரதான ரோட்டில் அடிக்கடி வாகன நெரிசல் யு டேர்ன் பகுதியை விரிவுபடுத்தணும்

பிரதான ரோட்டில் அடிக்கடி வாகன நெரிசல் யு டேர்ன் பகுதியை விரிவுபடுத்தணும்

கிணத்துக்கடவு,; கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாப் முன் உள்ள 'யு டேர்ன்' பகுதியில், அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுவதால் வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர். கிணத்துக்கடவு சர்வீஸ் ரோடு வழியாக தினமும் அதிகப்படியான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த ரோட்டின் இரு பக்கமும், கடைகள், வணிக வளாகங்கள், கோவில்கள் இருப்பதால் இங்கு வந்து செல்லும் மக்கள், தங்கள் வாகனங்களை சர்வீஸ் ரோட்டோரம் 'பார்க்கிங்' செய்கின்றனர். பழைய பஸ் ஸ்டாப்பில் இருந்து, வடசித்தூர் செல்லும் ரோட்டிற்கு திரும்பும் வாகனங்கள் 'யு டேர்ன்' வழியாக திரும்பி செல்கிறது. இதில், பைக், கார் போன்ற வாகனங்கள் எளிதாக சென்று வந்தாலும், டிப்பர் லாரி, பஸ் உள்ளிட்ட பெரிய அளவிலான வாகனங்கள் இப்பகுதியில் திரும்பி செல்லும்போது 'ரிவர்ஸ்' வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், நீண்ட நேரம் மற்ற வாகனங்கள் ரோட்டில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதுமட்டுமின்றி அவ்வப்போது ரோட்டோரம் 'பார்க்கிங்' செய்யப்பட்டும் பைக்குகள் மீது மற்ற வாகனங்கள் உரசுவதால், விபத்து ஏற்படுவதுடன், வாகனங்கள் சேதமடைகின்றன. இதே ரோட்டில் பெரும்பாலான வாகனங்கள் 'ஒன் வே'யில் இயக்கப்படுவதால், அடிக்கடி விபத்து நடக்கிறது. போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதுமட்டுமின்றி, ரோட்டோரம் மக்கள் நடந்து செல்லும் நடைபாதையில், வியாபாரிகள் சிலர் பெட்டிக்கடை, பழக்கடை வைத்திருப்பதால், பொதுமக்கள் சர்வீஸ் ரோட்டில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரே ரோட்டில், ஏராளமான பிரச்னை நிலவி வருவதால் தினமும் மக்கள் அவதிப்படுகின்றனர். இதைத் தவிர்க்க, 'யு டேர்ன்' பகுதி அருகே, ரோட்டை அகலப்படுத்த வேண்டும். அல்லது இந்த 'யு டேர்ன்' பகுதியை முழுமையாக அடைத்து செக்போஸ்ட் சென்று திரும்பும் வகையில் நடைமுறை படுத்தி, பஸ் ஸ்டாப் முன் வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்படுவதை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி