உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பழசுக்கு புதுசு  பட்டு மேளா 

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பழசுக்கு புதுசு  பட்டு மேளா 

கோவை; 90 வருட பாரம்பரியமிக்க கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில், 'பட்டு மேளா, பழசுக்கு புதுசு' சிறப்புத்தள்ளுபடி விற்பனை நடக்கிறது. வ.உ.சி. பார்க், கோ-ஆப்டெக்ஸ் மருதம் விற்பனை நிலையத்தில் வரும் 30ம் தேதி வரை நடக்கும் விற்பனையில், வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய பட்டுப் புடவைகளை மாற்றி , அதற்கான மதிப்பில் தங்களுக்கு தேவைப்படும் வேறு எந்த ரகங்களையும் பெற்றுக்கொள்ளலாம். இதையொட்டி, விதவிதமான வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளில் பட்டு சேலைகள், மென்பட்டு சேலைகள், காட்டன் சேலைகள், இயற்கை சாயமிட்ட பருத்தி காட்டன் சேலைகள், காஞ்சி காட்டன் சேலைகள், பரமக்குடி காட்டன் சேலைகள், சுங்குடி சேலைகள், படுக்கை விரிப்புகள், சுடிதார் ரகங்கள், குர்திஸ், நைட்டிகள், ஆடவர் ரெடி மேட் சட்டைகள் ஏராளமாக வந்துள்ளன. துவக்க விழாவில், கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் அம்சவேணி, துணை மண்டல மேலாளர் லட்சுமி பிரபா, மருதம் விற்பனை நிலைய மேலாளர் செல்வதுரை,விஜயானந்த் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முதல் விற்பனையை கோ-ஆப்டெக்ஸ் வாடிக்கையாளர் அனுராதா பெற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை