மேலும் செய்திகள்
கொலை முயற்சி : ஒருவர் கைது
25-Aug-2025
தொழிலாளிக்கு வெட்டு: இரு வாலிபர்கள் கைது
17-Aug-2025
Breaking நாகாலாந்து கவர்னர் இல. கணேசன் மரணம்
15-Aug-2025
கோவை; கோவை, எஸ்.என்.பாளையம், இந்திரா காந்தி நகரை சேர்ந்தவர் கணேசன், 27; ஆட்டோ டிரைவர். தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, சொந்தமாக பயணிகள் ஆட்டோ ஓட்டுகிறார். இவரது நண்பரான, ஆட்டோ டிரைவர் வீரகேரளத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார், 27, திருமணமான பெண் ஒருவருடன் தொடர்பு வைத்திருக்கிறார். இதை கணேசன் கண்டித்து, பலமுறை அறிவுரை வழங்கியுள்ளார். நேற்று முன்தினம் இருவரும், எஸ்.என்.பாளையம் நேதாஜி நகரில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். கள்ளத்தொடர்பை கண்டித்ததோடு, வேறு பெண்ணை திருமணம் செய்துகொள்ள, சந்தோஷ்குமாருக்கு கணேசன் அறிவுரை வழங்கினார். சந்தோஷ்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகாத வார்த்தைகளால் திட்டி, மறைத்து வைத்திருந்த கத்தியால் கணேசனை, சந்தோஷ்குமார் குத்தியதில், தோள்பட்டை, வயிறு ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிந்து சந்தோஷ்குமாரை, சிறையில் அடைத்தனர்.
25-Aug-2025
17-Aug-2025
15-Aug-2025