மேலும் செய்திகள்
'போர்க்லிப்ட் ஆப்பரேட்டர்' பயிற்சி பெற அழைப்பு
28-Aug-2025
கோவை; தமிழக அரசின் பழங்குடியினர் நலத்துறை மற்றும் கோவையில் உள்ள மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம் சார்பில், பழங்குடி இளைஞர்களுக்கு, வேளாண் கருவிகளைப் பழுதுபார்ப்பதற்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது. பயிற்சி ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ்ச் செல்வன் கூறியதாவது: பழங்குடி இளைஞர்களுக்கு டிராக்டர், பவர்டில்லர், கலப்பை, விதைப்புக் கருவி, களைக்கருவி, மருந்து தெளிப்புக்கருவி, அறுவடை, நுண்நீர் உள்ளிட்ட டிரோன் முதல் பொக்லைன் வரை வேளாண் சார்ந்த அனைத்து கருவிகள் சார்ந்து பழுதுபார்க்க பயிற்சி அளிக்கப்படும்.பயிற்சி கட்டணம் இல்லை. உணவு, தங்குமிடம், சீருடை, காலணி, பயிற்சி நுால்கள் இலவசம். பயிற்சி பெறுவோர் தங்கள் ஊரில் இருந்து கோவை வந்து செல்ல ரூ.1,000 பயணக்கட்டணம் வழங்கப்படும். குறைந்தபட்சம் 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். ஐ.டி.ஐ., டிப்ளமோ என எந்தப் படிப்பு பயின்றவர்களும் விண்ணப்பிக்கலாம். வரும் 15ம் தேதி முதல் குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்படும். 2வது குழுவினருக்கு அக்., 15ம் தேதியும், மூன்றாவது குழுவினருக்கு நவ., 15ம் தேதியும் பயிற்சி துவங்கும். பழங்குடியின பெண்களுக்கு டிச., 15ல் துவங்கி, ஜன., 14 வரை நடக்கும். பயிற்சி நிறைவில், டிராக்டர், வேளாண் கருவி உற்பத்தி நிறுவனங்களை அழைத்து, வளாகத்தேர்வு மூலம் வேலைவாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு, தெரிவித்தார். விவரங்களுக்கு, 0422 - 2472 624 மற்றும் 90036 31865
28-Aug-2025