மேலும் செய்திகள்
காலமானார் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது
3 hour(s) ago
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்
3 hour(s) ago
ஜன., 3ல் ஆருத்ரா தரிசனம்
4 hour(s) ago
அசத்தலான அசைவ விருந்துடன் கிறிஸ்துமசை கொண்டாடலாம்
4 hour(s) ago
கோவை;பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட நல விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தன.பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை துணை ஆட்சியர் முருகேசன், போட்டிகளை துவக்கி வைத்தார்.கோவை மாவட்டத்தில் உள்ள, 24 விடுதிகளில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, பல்வேறு தடகளப்போட்டிகள் நடத்தப்பட்டன.இதில் பள்ளி, கல்லுாரி மாணவ மாணவியர் 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.போட்டிக்கான ஏற்பாடுகளை, விடுதி காப்பாளர்கள் ராஜேந்திரன், மயில்சாமி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தடகளப் பயிற்சியாளர்கள் பத்மாவதி மற்றும் மோத்தி அருண் ஆகியோர் செய்திருந்தனர்.போட்டியில் வெற்றி பெற்றவர்கள் :6 - 8ம் வகுப்பு மாணவியருக்கான 100மீ., ஓட்டத்தில் சுபாசினி முதலிடம், அபிஸ்ரீ இரண்டாமிடம், ஜமுனா மூன்றாமிடம்; நீளம் தாண்டுதலில் அட்சயா ஸ்ரீ முதலிடம், கவுசி இரண்டாமிடம், ஹர்சினி மூன்றாமிடம்; 9 - 12ம் வகுப்பு மாணவியர் 100மீ., ஓட்டத்தில் தர்ஷினி முதலிடம், நிவேதா இரண்டாமிடம், ஸ்ரீநிதி மூன்றாமிடம் பிடித்தனர். கல்லுாரி மாணவியருக்கான 200மீ., ஓட்டத்தில் உமாதேவி முதலிடம், ஸ்ரீமதி இரண்டாமிடம், ரம்யா மூன்றாமிடம் பிடித்தனர்.6 - 8ம் வகுப்பு மாணவர்களுக்கான 100மீ., ஓட்டத்தில் பூபாலகிருஷ்ணன் முதலிடம், ஹரிகிருஷ்ணன் இரண்டாமிடம், தரணீஷ் மூன்றாமிடம்; நீளம் தாண்டுதலில் தரணீஷ் முதலிடம், ஹரிகிருஷ்ணன் இரண்டாமிடம், பூபாலகிருஷ்ணன் மூன்றாமிடம்; 9 -12ம் வகுப்பு மாணவர்கள் 100மீ., ஓட்டத்தில் சசிக்குமார் முதலிடம், சஞ்சய் ரித்திக் இரண்டாமிடம், சஞ்சய் மூன்றாமிடம்; கல்லுாரி மாணவர்களுக்கான 200மீ., ஓட்டத்தில் சரவணக்குமார் முதலிடம், ஜோஷ்வா இரண்டாமிடம், ராஜேஷ் மூன்றாமிடம் பிடித்தனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago