உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சி.பி.எஸ்.இ., தேர்வுகளில் கேம்போர்டு பள்ளி 100 சதவீத தேர்ச்சி

சி.பி.எஸ்.இ., தேர்வுகளில் கேம்போர்டு பள்ளி 100 சதவீத தேர்ச்சி

கோவை; சி.பி.எஸ்.இ., தேர்வுகளில் கேம்போர்டு பள்ளி மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் கேம்போர்டு சர்வதேச பள்ளி சார்பில், பிளஸ் 2 தேர்வுகளை எழுதிய 94 மாணவர்களும் வெற்றி பெற்று 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்தனர்.பள்ளியின் மாணவி புவனா சுப்ரஜா, 488 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். பாலா நிதின் 485, லக்சயா பரத்வாஜ், 485, யாஷ் அகர்வால், 481 மதிப்பெண்கள் பெற்றனர்.அதேபோல், பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய, 86 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். மாணவர் தர்ஷித் ரகுராம், 486 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்தார். கன்யா, 485, அர்ஷினி தனகோபால், 480 மதிப்பெண்கள் பெற்றனர்.பள்ளித் தலைவர் அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை, முதல்வர் பூணம் சியால் ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ