உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கால்பந்து போட்டியில் கேம்போர்டு பள்ளி சாதனை

கால்பந்து போட்டியில் கேம்போர்டு பள்ளி சாதனை

கோவை; பள்ளிகளுக்கு இடையேயான ஒன்பதாவது சஹோதயா '7 ஏ' கால்பந்து போட்டி, கேம்போர்டு சர்வதேச பள்ளியில் உள்ள டர்ப் மைதானத்தில் நடந்தது. 20 பள்ளிகளைச் சேர்ந்த பல்வேறு அணிகளும், 400 மாணவர்களும் பங்கேற்றனர். 19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில், தி கேம்போர்டு சர்வதேச பள்ளி வெற்றி பெற்றது. 17 மற்றும் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் யுவ பாரதி பப்ளிக் பள்ளி வெற்றி பெற்றது. இதில், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை, தி கேம்போர்டு சர்வதேச பள்ளி கைப்பற்றி, சாதனை படைத்துள்ளது. வெற்றி பெற்ற மாணவர்களை, கேம்போர்டு பள்ளி தலைவர் அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை, முதல்வர் பூனம் சயால் ஆகியோர் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ