கணபதி அரசுப்பள்ளி மாணவர்கள் கலக்கல்
கோவை; பள்ளிக் கல்வித்துறை சார்பில், கோவை மாவட்ட ஆ-குறு மையத்திற்கு உட்பட்ட, 43 பள்ளிகளுக்கான வளையப்பந்து போட்டி, கார்மல் கார்டன் மெட்ரிக் பள்ளியில் நடந்தது. கணபதி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் திறமைகளை வெளிப்படுத்தி, 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான இரட்டையர் பிரிவில் முதலிடம் பெற்றனர். 17, 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான தனிநபர் பிரிவிலும் முதலிடம் பிடித்து, மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான தனிநபர் பிரிவு, 17,19 வயதுக்குட்பட்ட மாணவியருக்கான தனிநபர் மற்றும் இரட்டையர் பிரிவில், இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர். 17 வயதுக்குட்பட்டோருக்கான செஸ் போட்டியில் 9ம் வகுப்பு மாணவர் யாத்ரன் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். மாணவ, மாணவியரை பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார் உள்ளிட்டோர் பாராட்டினர்.