காந்தி ஜெயந்தி விழா: ஆசிரமத்தில் கொண்டாட்டம்
ஆனைமலை: ஆனைமலை மகாத்மா காந்தி ஆசிரமத்தில், காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. கணக்கர் சுந்தர் வரவேற்றார். ஆர்ஷ வித்யா பீடத்தின் நிறுவனர் ததேவானந்த சரஸ்வதி சுவாமி தலைமை வகித்தார்.சர்க்கார்பதி மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி தலைமையில், ஆனைமலை பேரூராட்சி சுகாதாரப் பணியாளர் அய்யம்மாள் தேசியக்கொடி ஏற்றினார். தொடர்ந்து, பொள்ளாச்சி அமிர்தவர்ஷினி மற்றும் ஸ்ரீ ஹர்ஷினி சகோதரிகள், பிரார்த்தனை மற்றும் தேச பக்தி பாடல்கள் பாடினர்.உலக அமைதிக்காக, நிர்வாக அறங்காவலர் ரங்கநாதனின் தவம் நிகழ்ச்சியும் நடந்தது. அதன்பின், அறங்காவலர் வசந்தா உள்ளிட்ட பலரும் காந்தி மற்றும் கஸ்துாரிபாய் ஆகியோரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதேபோல, காந்தி கிராம பல்கலை முன்னாள் பேராசிரியர் பழனித்துரை, காந்தியின் வாழ்க்கை மற்றும் அவரது வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார். இயற்கை உணவு பயிற்றுநர் ஆனையப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மக்கள் மதுவிலக்கு இயக்க நிர்வாகி முருகானந்தம் நன்றி கூறினார்.