உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மத்திய இணை அமைச்சர் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி

மத்திய இணை அமைச்சர் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் மத்திய இணை அமைச்சர் முருகனின் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையத்தில் உள்ள மத்திய இணை அமைச்சர் முருகனின் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக கணபதி ஹோமம் பூஜை நடத்தப்பட்டது. இதில் பா.ஜ., மாநில செயலாளர் நந்தகுமார், மாவட்ட பொதுச் செயலாளர் விக்னேஷ், முன்னாள் மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் சதீஸ் மற்றும் பா.ஜ.,வினர் பலர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ