உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டிரான்ஸ்பார்மர் அருகே குப்பை; தீ விபத்து ஏற்படும் அபாயம்

டிரான்ஸ்பார்மர் அருகே குப்பை; தீ விபத்து ஏற்படும் அபாயம்

பொள்ளாச்சி; பகலில் கடும் வெயில் நிலவுவதால், டிரான்ஸ்பார்மர் அருகில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வேண்டும், என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப, மின்சாரம் சார்ந்த பயன்பாடுகளும், தேவைகளும் அதிகரித்து வருகின்றன.அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்கப்படுவது, குறைந்த மின்னழுத்தத்தால் விளக்குகள் எரியாமல் இருப்பது போன்ற பிரச்னை ஏற்படுவதை தடுக்க, ஆங்காங்கே புதிதாக கூடுதலாக டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டுள்ளன.சில பகுதிகளில், டிரான்ஸ்பார்மர் அருகில் குப்பை கொட்டப்படுகிறது. அவ்வப்போது, டிரான்ஸ்பார்மர் பராமரிப்பின் போது, மின்வாரிய ஊழியர்கள் அவற்றை அகற்ற முற்பட்டாலும், இந்த நிலை தொடர்கிறது.தற்போது, பகலில் கடும் வெயில் நிலவுவதால், ஏதேனும் வகையில் குப்பையில் தீ பரவினால், டிரான்ஸ்பார்மர் பாதிப்படையும். எனவே, டிரான்ஸ்பார்மர் அருகில் குப்பை கொட்டுவதை, மக்கள் தவிர்க்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.மின்வாரிய ஊழியர்கள் கூறியதாவது: சில பகுதிகளில், டிரான்ஸ்பார்மருக்கு மிக அருகில், குப்பை உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்படுவதால், பராமரிப்பு பணியின் போது சிரமம் ஏற்படுகிறது. டிரான்ஸ்பார்மர் மற்றும் சாலையோர மின் இணைப்பு பெட்டிகள் அருகில் அதிகளவில் குப்பை கொட்டப்படுகிறது. பொள்ளாச்சி நகரில், இத்தகைய விதிமீறல் தொடர்கிறது.டிரான்ஸ்பார்மர்களில் 'ஷார்ட் சர்க்யூட்' ஏற்படும் போது தீப்பொறி பறக்கும். அது குப்பையில் விழுந்து தீ விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. அதனால், டிரான்ஸ்பார்மர் அருகில் குப்பை கொட்டுவோரை கண்டறிந்து தடுக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை