மேலும் செய்திகள்
நீரோடை அருகே திடக்கழிவு குவிப்பு
10-Jul-2025
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, சிக்கலாம்பாளையம் ரோட்டோரம் குவிக்கப்பட்ட குப்பையில் மழைநீர் தேங்குவதால், துர்நாற்றம் வீசுகிறது.கிணத்துக்கடவு, சொக்கனூர் ரோடு வழியாக ஏராளமானோர் பயணிக்கின்றனர். இதில், சிக்கலாம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே ரோட்டோரத்தில் அதிகளவு குப்பை குவிக்கப்பட்டுள்ளது.இந்த இடத்தில், தற்போது மழைநீர் தேங்கி நிற்பதால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அவ்வழியாக செல்லும் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.இது மட்டுமின்றி, ரோட்டோரத்தில் கொட்டப்பட்ட குப்பை காற்றுக்கு பறக்கிறது. இதனால் வாகன ஓட்டுநர்கள் தடுமாறி செல்லும் நிலை உள்ளது. இதை ஊராட்சி நிர்வாகத்தினர் கவனித்து குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.மக்கள் கூறுகையில், 'குப்பை சேகரிக்க ஊராட்சி நிர்வாகம் சார்பில், அவ்வப்போது பணியாட்கள் வந்து சென்றாலும், ரோட்டோர கடைகள் வைத்திருப்பவர்கள் இரவு நேரத்தில் குப்பையை வீசி செல்கின்றனர். இது போன்ற செயலில் ஈடுபடுவோர் மீது ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
10-Jul-2025