உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோட்டோரத்தில் குப்பை: பொதுசுகாதாரம் பாதிப்பு

ரோட்டோரத்தில் குப்பை: பொதுசுகாதாரம் பாதிப்பு

நெகமம்: கோவில்பாளையம் --- நெகமம் ரோட்டோரத்தில், நீர் தேங்கிய இடத்தில் குப்பை குவிக்கப்பட்டிருப்பதால், துர்நாற்றம் வீசுகிறது. கோவில்பாளையம் --- நெகமம் செல்லும் ரோட்டில், தனியார் நிறுவனங்கள் அமைந்துள்ளதால், காலை மற்றும் மாலை நேரத்தில் போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது. இந்த ரோட்டில் கோவில்பாளையம் அருகே ரோட்டோரம் உள்ள வடிகால் பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன் மழை பெய்த போது, நீர் தேக்கம் அடைந்துள்ளது. தற்போது, இந்த ரோட்டில் வாகனங்களில் பயணிக்கும் சிலர், நீர் தேங்கி நிற்கும் இடத்தில் குப்பையை வீசி செல்கின்றனர். இதனால், அப்பகுதியை கடக்கும் போது கடும் துர்நாற்றம் வீசுவதுடன், நீர் மாசுபடுகிறது. இதனால் அருகில் உள்ள விளைநிலங்கள் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே, இங்கு குப்பை கொட்டுவதை கட்டுப்படுத்த ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி