உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குப்பை குவியலால் சுகாதாரம் பாதிப்பு

குப்பை குவியலால் சுகாதாரம் பாதிப்பு

கிணத்துக்கடவு, ; கிணத்துக்கடவு, சிக்கலாம்பாளையம் பகுதியில் உள்ள பாறை குழியில் கொட்டப்படும் குப்பையால் சுகாதாரம் பாதிக்கிறது.கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் ஊராட்சி, சிக்கலாம்பாளையத்தில் இருந்து, ஏழூர் செல்லும் ரோட்டில், தினமும் ஏராளமானோர் பயணித்து வருகின்றனர். இந்த ரோட்டின் ஓரத்தில் பெரிய அளவிலான பாறை குழி உள்ளது. இதில், அதிக அளவு குப்பை கொட்டப்படுகிறது.இந்த பாறை குழி சுற்றுப்புறத்தில் உள்ள லே-அவுட்டில், குடியிருப்புகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாறை குழியில் கொட்டப்படும் குப்பை அதிகரித்து, ஒரு பகுதியில் குப்பை நிறைந்தும், மற்றொரு பகுதியில் நீர் தேங்கியும் உள்ளது.இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், பொதுச்சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி இரவு நேரத்தில் எலி, பெருச்சாலி தொல்லை அதிகமாக இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.இதனால், இரவு நேரத்தில் அவ்வழியாக நடந்து செல்ல மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, மக்கள் நலன் கருதி இந்த பாறை குழியில் குப்பை கொட்டுவதை தவிர்த்து, மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் குப்பை குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை