மேலும் செய்திகள்
ஆனி கடைசி வெள்ளி கோவில்களில் வழிபாடு
12-Jul-2025
பொள்ளாச்சி; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், கருட பஞ்சமியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பொள்ளாச்சி கடைவீதி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், கருடபஞ்சமியை முன்னிட்டு, கருட பகவானுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பொள்ளாச்சி அருகே, டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில், கருடாழ்வாருக்கு திவ்ய அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். * ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி ரங்கநாத பெருமாள் கோவிலில், கருட பஞ்சமியை முன்னிட்டு, பால், தயிர், இளநீர் என, ஒன்பது வகை அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் கருட பகவான், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள், தீபம் ஏற்றி கருட பகவானை வழிபட்டனர்.
12-Jul-2025