உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உளவியல் நோக்கில் பாலின விழிப்புணர்வு கருத்தரங்கம்

உளவியல் நோக்கில் பாலின விழிப்புணர்வு கருத்தரங்கம்

வால்பாறை; வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உளவியல் கண்காணிப்பு மற்றும் பாலின சமத்துவ விழிப்புணர்வு குழு சார்பில், 'உளவியல் நோக்கில் பாலின விழிப்புணர்வு கருத்தரங்கம்' முதல்வர் ஜோதிமணி தலைமையில் நடந்தது. அரசு மருத்துவமனை உளவியல் நிபுணர் டாக்டர் ஹெலினாசெல்வக்கொடி கலந்து கொண்டு பேசும் போது, ''கல்லுாரியில் படிக்கும் வயதில் மனதில் தேவையற்ற சிந்தனைகளுக்கு இடம் தரக்கூடாது. ஆண், பெண் நட்பு விஷயத்தில் கட்டுப்பாடுகள் மிக அவசியம். கல்வி சார்ந்த விஷயங்களுக்கு மட்டுமே மொபைல்போன்களை பயன்படுத்த வேண்டும். படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்,'' என்றார். நிகழ்ச்சியில், உளவியல் நிபுணர் டாக்டர் விகாஷ், கல்லுாரி ஆங்கிலத்துறை தலைவர் ரூபா உட்பட பலர் கலந்து கொண்டனர். கணினி அறிவியல் துறைத்தலைவர் உமாமகேஸ்வரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ