மேலும் செய்திகள்
நொச்சி, ஆடாதொடா வளர்க்க விவசாயிகளுக்கு அழைப்பு
28-Oct-2024
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.கிணத்துக்கடவு வட்டாரத்தில், தற்போது ராபி பருவத்தில் அக்டோபர் முதல் நாளில் இருந்து சோளம் மற்றும் மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு, புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் வாயிலாக காப்பீடு செய்யப்படுகிறது.இதில், சோளம் ஒரு ஹெக்டேருக்கு, 26,802 ரூபாய் காப்பீட்டு தொகையாக உள்ளது. இதற்கு 402 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும். மேலும், டிசம்பர் 16ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும்.மக்காச்சோளம் ஒரு ஹெக்டேருக்கு, 89,167 ரூபாய் காப்பீட்டு தொகையாக உள்ளது. இதற்கு 1,337.50 ரூபாய் பிரீமியமாக செலுத்த வேண்டும். வரும், 30ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும்.விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு காப்பீடு செய்ய கூட்டுறவு வங்கி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் இ - சேவை மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம். பயிர் காப்பீடு செய்யும் போது, சாகுபடி காலத்தில் பாதிப்பு ஏற்பட்டால், விவசாயிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட காப்பீட்டு தொகை கிடைக்கும்.விவசாயிகளுக்கு, காப்பீடு குறித்து சந்தேகம் இருப்பின், அந்தந்த பகுதி வேளாண் அலுவலர்களிடம் கேட்டறிந்து கொள்ளலாம்.இத்தகவலை, கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குனர் அனந்தகுமார் மற்றும் துணை வேளாண் அலுவலர் மோகனசுந்தரம் ஆகியோர் தெரிவித்தனர்.
28-Oct-2024