உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆட்டுக்கொள்ளை நோய் தடுப்பூசி போடுங்க!

ஆட்டுக்கொள்ளை நோய் தடுப்பூசி போடுங்க!

பொள்ளாச்சி; கோவை மாவட்டத்தில்,வரும் 30ம் தேதி வரை,சாரல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.கோவை, வேளாண் பல்கலை வளாகத்தில் அமைந்துள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கைவருமாறு:வரும் 30ம் தேதி வரை, கோவை மாவட்டத்தில் சாரல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சில பயிர்களில் வேர்ப்புழு தாக்குதல் இருக்கலாம். எனவே, கோடை உழவு செய்ய வேண்டும். சுழற்சி முறையில் பயிர் சாகுபடி செய்ய வேண்டும்.நிலக்கடலை பூக்கும் தருவாயில் இருக்கும். நீர்ப்பற்றாக்குறை உள்ள இடங்களில், 0.5 சதவீத பொட்டாசியம் குளோரைடு தெளிக்கவும். இலைத் துளைப்பான் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.மாமரங்களில்ஏற்கனவேபூபூத்திருந்தால்,2 சதவீத பொட்டாசியம் நைட்ரேட் கரைசல் தெளிக்கவும். போதிய ஈரப்பதம் பேணவும். கால்நடைகளைப் பொறுத்தவரை, அதிக வெப்பத்தால் பாதிக்கப்படும் என்பதால், குளிர்ச்சியைப் பேணவும். ஆட்டுக் கொள்ளை நோய் தடுப்பூசி போட்டுக் கொள்ளவும். நீரில்'பி'காம்பளக்ஸ் கலந்து, பண்ணைக் கோழிகளுக்கும் இதர பறவைகளுக்கும் வழங்கவும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ