உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; தாத்தா, சித்தப்பா மீது குண்டாஸ்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; தாத்தா, சித்தப்பா மீது குண்டாஸ்

கோவை : கோவை, காந்திபுரம் பகுதியை சேர்ந்த வியாபாரி மகள் 11 வயது சிறுமி; அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், வகுப்பில் சிறுமி சோர்வாக இருப்பதை பார்த்த ஆசிரியை, அவரிடம் விசாரித்துள்ளார். அப்போது, சிறுமியின் 75 வயது தாத்தா மற்றும் 33 சித்தப்பா ஆகியோர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக, சிறுமி தெரிவித்தார். ஆசிரியை 'சைல்டு லைன்'க்கு தகவல் தெரிவித்தார்.சைல்டு லைன் மேற்பார்வையாளர் கிருஷ்ணகுமாரி, கோவை மத்திய அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் பேரில், போலீசார் தாத்தாவையும் சித்தப்பாவையும் கைது செய்து விசாரித்தனர். தாத்தா, சிறுமி 2ம் வகுப்பு படிக்கும் போதிருந்து, பாலியல் வன்கொடுமை செய்து வந்ததும், சித்தப்பா கடந்த ஜன., முதல் பாலியல் ரீதியாக அத்துமீறி வருவதும் தெரியவந்தது. போலீசார் இருவர் மீதும், போக்சோ வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர். கோவை மத்திய சிறையில் இருவரும், விசாரணை கைதிகளாக இருந்து வந்த நிலையில், இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்க மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில், மாநகர போலீஸ் கமிஷனர், இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி