மேலும் செய்திகள்
தோஷம் கழிப்பதாக பெண்ணிடம் நகை பறிப்பு
29-Sep-2024
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, பஸ்சில் தவற விட்ட நகை பேக்கை எடுத்து சென்ற நபரை கிழக்கு போலீசார் கைது செய்தனர்.பொள்ளாச்சி அருகே, சூளேஸ்வரன்பட்டி மோதிராபுரத்தை சேர்ந்த தங்கலட்சுமி. இவர், கடந்த, 5ம் தேதி திருநெல்வேலியில் இருந்து பொள்ளாச்சி வந்தார். அப்போது, அவர் வைத்து இருந்த பையை பஸ்சிலேயே மறந்த விட்டு இறங்கியுள்ளார். அதில், 35 பவுன் நகைகள், ஆயிரம் ரூபாய் பணம், மொபைல்போன் இருந்ததாகவும், அதை கண்டுபிடித்து தருமாறு கிழக்கு போலீசாரிடம் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, கூடுதல் எஸ்.பி., சிருஷ்டி சிங் தலைமையில் எஸ்.ஐ.,க்கள் பிரபாகரன், கவுதம் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணையை துரிதப்படுத்தினர்.இந்நிலையில், பொள்ளாச்சி தனியார் பேக்கரி அருகே சந்தேகப்படும்படி நின்ற நபரை பிடித்து விசாரித்த போது, திருநெல்வேலியை சேர்ந்த முருகன், 50, டிரைவராக நெகமம் அருகே வேலை செய்து வந்ததும், பஸ்சில் பெண் தவற விட்ட நகை பேக்கை எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, 35 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.கிழக்கு போலீசார் கூறுகையில், 'பொருட்கள் கீழே கிடந்தால் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு கொடுத்தால், சன்மானம் வழங்கி கவுரவிக்கப்படும். தற்போது, இவர், நகையை எடுத்துச் சென்றதால், வழக்கில் சிக்கியுள்ளார். அடுத்தவர் பொருட்களை ஆசைப்படாமல் போலீசாரிடம் ஒப்படைத்தால், பொருளை தவற விட்டவர்களுக்கு உதவியாக இருக்கும்,' என்றனர்.
29-Sep-2024