உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜி.கே.என்.எம்., நிறுவனர் தின விழா கொண்டாட்டம்

ஜி.கே.என்.எம்., நிறுவனர் தின விழா கொண்டாட்டம்

கோவை; ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையின், 73வது நிறுவனர் தின விழா, மணி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.விழாவில், மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி பேசுகையில்,''1952ம் ஆண்டு 50 படுக்கைகள் கொண்ட தாய் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையாக நிறுவப்பட்டது. தற்போது, 650 படுக்கைகள் கொண்ட பல்துறை சிறப்பு மருத்துவமனையாக வளர்ந்துள்ளது. குறைந்த கட்டணத்தில், பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சேவை வழங்க வேண்டும் என்ற, ஜி.குப்புசாமி நாயுடுவின் தொலைநோக்குப் பார்வையின் வழியில் தொடர்ந்து பயணிக்கிறது,'' என்றார்.3எம் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் மற்றும் தலைமை நிதி அதிகாரி வித்யா சாரதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஜி.கே.என்.எம்., பணியாளர்களின் சேவையை கவுரவிக்கும் வகையில், கே.என்.சி., அறக்கட்டளையின் துணைத் தலைவர் கோபிநாத் விருதுகளை வழங்கினார். குப்புசாமி நாயுடு அறக்கட்டளையின் துணைத் தலைவர் கோபிநாத், ஜி.கே.என்.எம்., மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி மனோகரன் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை