உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குளோபல் எக்ஸ்போ -2025: கோவையில் துவங்கியது கருத்தரங்கு

குளோபல் எக்ஸ்போ -2025: கோவையில் துவங்கியது கருத்தரங்கு

கோவை; கோவையில், பி.என். ஐ., ஸ்டார்ட் அப் தமிழ்நாடு, ஜூபிலன்ட் தமிழ்நாடு, பெமி ஆகியவை சார்பில், 'குளோபல் எக்ஸ்போ மற்றும் நாலெட்ஜ் கருத்தரங்கு 2025', நேற்று துவங்கியது. நாளை நிறைவு பெறுகிறது.கோவை அவிநாசி ரோட்டில் உள்ள, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் துவங்கிய இந்த கருத்தரங்கை, கோவை எம்.பி., ராஜ்குமார் துவக்கி வைத்தார். குளோபல் நெட்வொர்க் இன்டர்நேஷனல் (பி.என்.ஐ.) கோவை கிளை தலைவர் அபுதாகீர் வரவேற்றார். கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் பேசியதாவது:ஏற்றுமதி தொழில் செய்வோர்க்கு இடையே அறிமுகம் செய்து கொள்ளவும், வணிக ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும், இந்த கருத்தரங்கு சிறந்த வாய்ப்பாக அமையும். 25 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். ஸ்டார்ட் அப் தொழில் முனைவோர், வணிக நிறுவனத்தினர், சிறு, குறு, நடுத்தர தொழில் செய்வோர், பேச்சாளர்கள், தொழில் துறையில் வெற்றி பெற்றோர் தங்கள் அனுபவங்களை பகிர்கின்றனர். ஆஸ்திரேலியா, அரபு நாடுகள், இலங்கை, மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.நுாற்றுக்கும் மேற்பட்ட புதிய கண்டுபிடிப்பு ஸ்டால்கள், இடம் பெற்றுள்ளன. உணவு பொருட்கள், இயந்திரங்கள், வீட்டு உபயோக பொருட்கள், ஏற்றுமதி தரம் வாய்ந்த வேளாண்மை பொருட்கள், நறுமண பொருட்கள், தென்னை உப பொருட்கள் உள்ளிட்ட, பல்வேறு பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் பேசினார்.இரண்டு நாட்களில் முழுமையாக கட்டப்படும் வீடு, அதிக எடையை அளக்கும் கருவியை ஒரு நாளில் நிறுவுதல் என, இரண்டு ஸ்டார்ட் அப் சாதனைகள் நிகழ்ச்சியில் இடம் பெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி