உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பகவான் நம்மை படைத்தது பிறருக்கு நன்மை செய்யவே

பகவான் நம்மை படைத்தது பிறருக்கு நன்மை செய்யவே

கோவை; ராம்நகரில் உள்ள கோதண்டராமர் கோவிலில், வில்லி பாரதம் சொற்பொழிவுநிகழ்ச்சி, நேற்று நடந்தது. இதில், ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது:எந்த செயலை செய்தாலும், பகவானை மனதில் நினைத்துக்கொண்டு முழு மனதுடன், ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். அப்படி செய்யும் செயல் அனைத்தும் நல்ல பலனை கொடுக்கும். கர்வம், கோபம், பேராசை உள்ளவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது, அவர்கள் கஷ்டமும் தீராது. இந்த மூன்றும் உள்ளவர்களை, இந்த சமுதாயமும் மதிக்காது. அவகளை வீட்டில் உள்ளவர்களே மதிக்கமாட்டார்கள்.ராவணனுக்கு இந்த மூன்றும் இருந்ததால்தான், அவன் மனைவி மண்டோதரியே அவனை மதிக்கவில்லை. தன் நாடு, நகரம், மக்கள் அனைத்தையும் இழந்து மாண்டு போனான்.தசரதனுக்கு கைகேயி மேல் இருந்த ஆசைதான், ராமனை பிரிந்து பெரும் துன்பதை அனுபவிக்க காரணமாக இருந்தது.நாம் வாழும் காலத்திலேயே, இந்த மூன்றையும் நீக்கி விட வேண்டும்.பகவான் நம்மை படைத்தது, பிறருக்கு நல்லது செய்து நாமும் நன்றாக வாழத்தான். இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை