உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கேம்போர்ட் பள்ளியில் கோல்டன் பூட் சாம்பியன்ஷிப்

கேம்போர்ட் பள்ளியில் கோல்டன் பூட் சாம்பியன்ஷிப்

கோவை: பள்ளிகளுக்கு இடையேயான கேம்போர்ட் கோல்டன் பூட் சாம்பியன்ஷிப் போட்டிகள், கேம்போர்ட் பள்ளி வளாகத்தில் நடந்தது.இதில், பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 20 அணிகள் பங்கேற்றன. 18 வயதுக்குட்பட்ட சிறுமியர், 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு, போட்டிகள் நடத்தப்பட்டன.சிறுமியருக்கான போட்டியில், கேம்போர்டு சர்வதேச பள்ளி முதல் இடத்தையும், யுவா பப்ளிக் பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்றது. சிறுவர்களுக்கான பிரிவில், அத்யாயனா இன்டர்நேஷனல் பப்ளிக் முதல் இடத்தையும், கேம்போர்டு சர்வதேச பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்றது.சிறந்த வீரர்களாக ராஜ்ஸ்ரீ, கயலின் மற்றும் அனிருதா தேர்வு செய்யப்பட்டனர். பள்ளியின் தலைவர் அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை, வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை