உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: 50 கால்நடைகளுக்கு தடுப்பூசி

 கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: 50 கால்நடைகளுக்கு தடுப்பூசி

பெ.நா.பாளையம்: சின் னதடாகம் அருகே உள்ள வீரபாண்டி புதூரில் கால்நடை துறை சார்பில், 50 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், வீரபாண்டி ஊராட்சிக்குட்பட்ட வீரபாண்டி புதூரில் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தில், கோமாரி நோய் தடுப்பு ஊசி செலுத்தும் முகாம் நடந்தது. கால்நடை மருத்துவர் டாக்டர் பார்த்திபன், கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டார். முதல் கட்டமாக, 45 பசுக்கள் உள்ளிட்ட, 50 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி முகாம், 2026 ஜன., 28ம் தேதி வரை ஒரு மாத கா லம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக முன்கூட்டியே அறிவிக்கப்படும் தேதிகளில் கால்நடை வளர்ப்போர் தங்களுடைய கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தி பயன் பெறுமாறு, கால்நடை துறை கேட்டுக் கொண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !