உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போத்தனுார் ரயில்வே மேம்பாட்டு பணி முடிந்ததும் கோவைக்கு மகிழ்ச்சி செய்தி

போத்தனுார் ரயில்வே மேம்பாட்டு பணி முடிந்ததும் கோவைக்கு மகிழ்ச்சி செய்தி

கோவை; பல்வேறு மேம்பாட்டு பணிகள் முடிந்ததும், கோவையின் ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது.தொழில் நகரமான கோவையில், வடமாநிலத் தொழிலாளிகள் மற்றும் பல்வேறு மாவட்ட மக்களும் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். பண்டிகை, காலங்களில் தென்மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் சிரமப்படுவது, தொடர் கதையாகி வருகிறது.கோவை - மதுரை இடையேயான, மீட்டர் கேஜ் பாதையில் பல ரயில்கள் இயக்கப்பட்டன. இதன் வாயிலாக தென்மாவட்ட மக்கள் பெரிதும் பயனடைந்து வந்தனர்.அகல ரயில் பாதை மாற்றும் பணிக்காக, இந்த ரயில்கள் நிறுத்தப்பட்டன. ஆனால், அகல ரயில்பாதை பணிகள் முடிந்து, பல ஆண்டுகள் கடந்த பின்னரும், கோவை - ராமேஸ்வரம், கோவை - தூத்துக்குடி, கோவை - செங்கோட்டை, மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி, மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி, கோவை - போடிநாயக்கனுார் ஆகிய ரயில்கள் தினசரி ரயில்களாக இயக்கப்பட வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலே உள்ளன.போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்த உடன், தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க, ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !