உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பழுது நீக்கப்படாத அரசு பஸ்கள்; டிரைவர், கண்டக்டர்கள் திணறல்   

பழுது நீக்கப்படாத அரசு பஸ்கள்; டிரைவர், கண்டக்டர்கள் திணறல்   

பொள்ளாச்சி; அரசு பஸ்களில் பழுதான உதிரி பாகங்கள் மாற்றப்படாமல், மாற்று வாகனம் வழங்கப்படுவதால், டிரைவர்கள் திணறுகின்றனர்.அரசு போக்குவரத்து கழகம், பொள்ளாச்சியில் உள்ள மூன்று பணிமனைகளில் இருந்து, 190க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், இந்த பஸ்களை பராமரிக்கவும், அவ்வப்போது ஏற்படும் பழுதுகளை சரிசெய்யவும் போதிய உதிரி பாகங்கள், பணிமனைகளில் கிடையாது.முறையாக பழுது நீக்காமல் இருப்பது, இழுவை திறன் குறைவு, அதிகப்படியான ஸ்டாப் மற்றும் நெரிசல் மிக்க ரோடுகளில் நின்று செல்வது போன்ற காரணங்களால், டீசலை மிச்சப்படுத்த முடியாமல், அரசு பஸ் டிரைவர்கள் திணறுகின்றனர். தொலைதுார ஊர்களுக்கு இயக்கப்படும் பஸ்களில், இப்பிரச்னை உள்ளதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.இது குறித்து, அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் கூறியதாவது:உதிரி பாகங்களில் அடிக்கடி ஏற்படும் பழுது காரணமாக, டிரைவர் மற்றும் கண்டக்டர்களே அதிகம் பாதிக்கிறோம். ஒவ்வொரு ஊர்களுக்கும் சென்று திரும்பும்போதும், திணற வேண்டியுள்ளது.டிரைவர்கள் எழுதி வைக்கும் பழுது புகார்கள் சரி செய்யப்படுவதில்லை. அதற்கு மாறாக, 'டிரிப்' செல்ல மாற்று பஸ் ஒதுக்கப்படுகிறது. பழுது நீக்கம் செய்யப்படாத பஸ், வேறு வழித்தடத்தில் இயக்க அனுமதிக்கப்படுகிறது.டயர், பிரேக் லைனிங், ஸ்பிரிங் உள்ளிட்ட உதிரிபாகங்கள் பற்றாக்குறையாக உள்ளன. தேவையான உதிரி பொருட்கள் தருவிக்க, துறை ரீதியான உயரதிகாரிகள், அரசின் கவனத்துக்கு எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை