மேலும் செய்திகள்
3ம் நாளாக வக்கீல்கள்பணி புறக்கணிப்பு
22-Feb-2025
ஊரக வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
12-Mar-2025
அன்னுார்; தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்ததையடுத்து, நேற்று பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடைபெறவில்லை. பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உட்பட, 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 18ம் தேதி மாலை ஒரு மணி நேரம் பணியை புறக்கணித்து வெளிநடப்பு செய்யும் போராட்டமும், 20ம் தேதி சென்னையில் ஊரக வளர்ச்சி துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டமும் நடத்தப்படும் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் அறிவித்திருந்தது.இந்நிலையில், தமிழக அரசு சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.இதுகுறித்து சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்துராஜ் கூறுகையில், அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்ததால், வரும் 20ம் தேதி நடக்க இருந்த முற்றுகை போராட்டமும், பணி புறக்கணிப்பு போராட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
22-Feb-2025
12-Mar-2025