மேலும் செய்திகள்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
30-May-2025
அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
19-Jun-2025
கோவை; பெண் ஊழியரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள தனியார் கல்லுாரியில் அலுவலக உதவியாளராக பணிபுரியும், முத்துமாரி என்பவரை தற்காலிக காவலர் பழனியப்பன் தாக்கினார். பழனியப்பன் மற்றும் அவரை துாண்டி விட்ட கல்லுாரி முதல்வர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கை எடுக்காக போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.கோவை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் உதயகுமார், மாவட்ட துணைத்தலைவர்கள், பிலால் மக்துாம், இளங்கோவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
30-May-2025
19-Jun-2025