உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முகாமுக்கு சென்ற அதிகாரிகள்; அரசு அலுவலகங்கள் வெறிச்

முகாமுக்கு சென்ற அதிகாரிகள்; அரசு அலுவலகங்கள் வெறிச்

வால்பாறை: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமுக்கு அதிகாரிகள் சென்றதால், வால்பாறையில் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. வால்பாறை நகராட்சி சமுதாய நலக்கூடத்தில், மூன்றாவது கட்டமாக உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமில், 13 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். இதனால், வால்பாறை நகரில் உள்ள நகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகம், தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் அதிகாரிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. முகாம் நடைபெற்ற இடத்தில் போதிய இடவசதி இல்லாததால், பொதுமக்கள் ரோட்டில் அமர்ந்திருந்தனர். குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை கேட்டு ஆயிரக்கணக்கான மக்கள் மனு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை