மேலும் செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வினியோகம்
09-Oct-2024
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, அரசம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், 50 லட்சம் மதிப்பிலான புதிய பள்ளி கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், கோவை மெட்ரொபாலிஸ் ரோட்டரி கிளப் இணைந்து, அமுதச்செம்மல் (ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளரின் தந்தை) மகாதேவஅய்யரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது.இதனை முன்னிட்டு, கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, அரசம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், மாணவர்களின் வசதிக்காக, 50 லட்சம் மதிப்பீட்டில் (ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ரூபாய் 25 லட்சம் மற்றும் கோவை மெட்ரொபாலிஸ் ரோட்டரி சங்கம் சார்பில் ரூபாய் 25 லட்சம்) நான்கு வகுப்பறை கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது.நிகழ்ச்சியில், கோவை கலெக்டர் கிராந்திகுமாரிடம், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் கிருஷ்ணன், கோவை மெட்ரொபாலிஸ் ரோட்டரி கிளப்பின் தலைவர் வரதராஜன் ஆகியோர், நிதியுதவிக்கான காசோலையை வழங்கினர். மாவட்ட கல்வி அதிகாரி மகேஸ்வரி, பள்ளி தலைமை ஆசிரியர் வித்தியா, ஊராட்சி தலைவர் சுந்தர்ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
09-Oct-2024