அரசு பள்ளி நூற்றாண்டு விழா
அன்னுார்: அன்னூர் வடக்கு துவக்கப்பள்ளி நூற்றாண்டு விழா இன்று (21ம் தேதி) நடைபெறுகிறது. அன்னூர் வடக்கு துவக்கப்பள்ளி 1921ம் ஆண்டு துவக்கப்பட்டது. இப்பள்ளியில் தற்போது 140க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.முப்பெரும் விழா இன்று (21ம் தேதி) மாலை 4:00 மணிக்கு பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தலைமை வைக்கிறார். இப்ப பள்ளி முன்னாள் மாணவர் கே.ஜி. மருத்துவமனை தலைவர் பக்தவத்சலம், தன்னம்பிக்கை பேச்சாளர் கவிதாசன் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.விழாவில் பங்கேற்க முன்னாள் மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.