உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மதிப்பெண் வாழ்க்கையை தீர்மானிப்பதேயில்லை

மதிப்பெண் வாழ்க்கையை தீர்மானிப்பதேயில்லை

'மாற்றம்' அறக்கட்டளையின் துணை நிறுவனர் உதயசங்கர் பேசியதாவது:ஒவ்வொரு பெற்றோரின் ஒரே கனவு, அவரவர் பிள்ளைகளின் சிறப்பான எதிர்காலம் மட்டுமே. உங்கள் மீது பெற்றோருக்கு அசைக்கமுடியாத நம்பிக்கையை ஏற்படுத்துவதே முதல் வெற்றி.பிளஸ்2 தேர்வு, கல்லுாரிகளில் நீங்கள் பெறும் மதிப்பெண்கள் உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கப்போவதில்லை. என்ன மதிப்பெண் வந்தாலும், துவண்டுபோகாமல் ஏற்றுக்கொள்ளுங்கள்.நாட்டில் ஆண்டுதோறும் இன்ஜினியரிங் பட்டம் பெற்று, லட்சக்கணக்கான மாணவர்கள் வெளிவருகின்றனர். இன்ஜினியரிங் மட்டுமின்றி, தற்போது கலை அறிவியல் படித்து வருபவர்களும் சமமான போட்டிக்களத்தில் உள்ளனர். ஆகையால், பாடப்பிரிவுகளை தேர்வு செய்யும் போதே மிகவும் தெளிவுடன் இருக்க வேண்டும்.கல்லுாரிகளை தேர்வு செய்யும் போது அதன் பிரமாண்டத்தையும், கலைவிழாக்களையும் பார்க்காமல் தொழில்நுட்ப போட்டிகள் நடத்துகின்றார்களா, முன்னாள் மாணவர்கள் எங்கு பணியாற்றுகின்றனர், திறன் சார்ந்த பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றார்களா என்பதை பாருங்கள்.இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ