உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பட்டதாரி ஆசிரியர் கழகம் புதிய நிர்வாகிகள் தேர்வு 

பட்டதாரி ஆசிரியர் கழகம் புதிய நிர்வாகிகள் தேர்வு 

கோவை : தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், கோவை மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. சங்கத்தின் மாவட்ட தேர்தல் கமிஷனர் ரவி மேற்பார்வையில் நடந்த இந்த தேர்தலில், மாவட்டத் தலைவராக சரவணக்குமார், செயலாளராக வேல்ராஜ், பொருளாளராக, ஹிதாயத்துல் சாதிக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட சட்ட செயலராக கதிர்வேல், தலைமை நிலைய செயலாளராக வேணுகோபால், தகவல் தொடர்பு செயலாளராக கவிதா தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட துணைத்தலைவர்கள், துணைச்செயலாளர்கள் மற்றும் மகளிர் அணி செயலாளர்கள் என, எட்டும் பேரும், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஏழு பேரும் தேர்வு செய்யப்பட்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, மாவட்ட பொறுப்பாளர்களுக்கு மாநில துணைத்தலைவர் அருளானந்தம், மகளிர் அணி செயலாளர் சித்ராதேவி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ