உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரியில் பட்டமளிப்பு

பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரியில் பட்டமளிப்பு

கோவை, : பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரியில் பட்டமளிப்பு விழா, நேற்று பி.எஸ்.ஜி., மருத்துவமனை அரங்கில் நடந்தது. பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஆனந்த் தேஷ்பாண்டே தலைமைவகித்து, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். இதில், அவர் பேசியதாவது: தொழில்நுட்பங்கள் அனைத்து துறைகளிலும், புரட்சியை ஏற்படுத்திவரும் சூழலில், எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகள் குறைவாக இருக்கும். நிறைய பணிகளை ஒரே சமயத்தில் மேற்கொள்ளும் திறன் இருக்க வேண்டியது அவசியம். இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக அல்லாமல், வேலையை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும். வாய்ப்புகளை பயன்படுத்த எப்போதும் தயாராக இருங்கள். சுய ஒழுக்கம், தொடர் கற்றல், வெற்றியிலும் தோல்வியிலும் நிலையான மனநிலை என்பதை, வாழ்க்கை முழுவதும் பின்பற்றுங்கள். இவ்வாறு, அவர் பேசினார். பட்டமளிப்பு விழாவில், அறிவியல் பிரிவுகளில் படித்த 361 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில், கல்வி, நுண்கலைகள், பேச்சு, மொழித்திறன் உள்ளிட்ட பல்துறைகளில் சிறப்பாக விளங்கிய மாணவருக்கு, மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் துறையின் முன்னாள் தலைவர் நவநீதனால் நிறுவப்பட்ட, பன்முகத்தாள்வார் விருது வழங்கப்பட்டது.பி.எஸ்.ஜி., நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், முதல்வர் பிரகாசன், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ