உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அக்., 2ல் நடக்க இருந்த கிராமசபை கூட்டம் ஒத்திவைப்பு

அக்., 2ல் நடக்க இருந்த கிராமசபை கூட்டம் ஒத்திவைப்பு

சூலுார்;அக்., 2ல் நடக்க இருந்த கிராம சபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் அக்., 2 ம்தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று அனைத்து ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடத்தவேண்டும், என, கடந்த 12ம் தேதி ஊரக வளர்ச்சித்துறை கமிஷனர் கலெக்டர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில நிர்வாகிகள், கமிஷனருக்கு எழுதிய கடிதத்தில், வரும், அக். 2ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த வேண்டிய தினத்தில், ஆயுத பூஜை வருகிறது. பெரும்பான்மையான பணியாளர்கள், அக்., 1ல் சரஸ்வதி பூஜை, அக்., 2ல் ஆயுத பூஜை கொண்டாட சொந்த ஊர் செல்ல வேண்டியுள்ளது. அதனால், பணியாளர்களின் வழிபாட்டு உணர்வுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், கிராம சபை கூட்டத்தை வேறு ஒரு நாளில் நடத்தி கொள்ள அனுமதிக்க வேண்டும், என கூறியிருந்தனர். இதுகுறித்து பரிசீலித்த அதிகாரிகள், அக்., 2ம்தேதி நடந்த இருந்த கிராம சபை கூட்டத்தை, மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர். ஊரக வளர்ச்சி துறை கூடுதல் இயக்குனர், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், 'அக்., 2ம் தேதி நடக்க இருந்த கிராம சபை கூட்டம், நிர்வாக காரணங்களுக்காக தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும், என, கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை