உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  குப்பே பாளையத்தில் இன்று கிராம சபை கூட்டம்

 குப்பே பாளையத்தில் இன்று கிராம சபை கூட்டம்

அன்னூர்: குப்பேபாளையம் ஊராட்சியில் இன்று (5ம் தேதி) சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், கடந்த 2024 ஏப். 1 முதல், 2025 மார்ச் 31 முடிய, குப்பே பாளையம் ஊராட்சியில் செய்யப்பட்ட பணிகள் கடந்த மூன்று நாட்களாக சமூக தணிக்கை செய்யப்பட்டது. செய்யப்பட்ட பணிகள் அளவீடு எடுக்கப்பட்டன. ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதையடுத்து தணிக்கை அறிக்கை தயாரிக்கப்பட்டது. இன்று காலை 11:00 மணிக்கு, குப்பே பாளையம் ஊராட்சியில் பச்சாபாளையத்திலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது. இதில் கடந்த ஓராண்டில் செய்யப்பட்ட பணி, ஒதுக்கப்பட்ட நிதி, கண்டறியப்பட்ட ஆட்சேபனைகள், சமூக தணிக்கை அறிக்கையில் வாசிக்கப்படுகிறது. பொதுமக்கள் பங்கேற்க ஊரக வளர்ச்சித் துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ