உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பைக் மீது கார் மோதி விபத்து தாத்தா, பேத்தி பலி; மூவர் காயம்

பைக் மீது கார் மோதி விபத்து தாத்தா, பேத்தி பலி; மூவர் காயம்

கிணத்துக்கடவு: பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், கோவில்பாளையத்தில் பைக் மீது கார் மோதிய விபத்தில், தாத்தா, பேத்தி இருவர் இறந்தனர். கோவை கிணத்துக்கடவு, கோவில்பாளையத்தை சேர்ந்தவர் முருகேஷ், 57, கூலி தொழிலாளி. அவரது மனைவி ஜோதி, 52, மகள் சந்தியா, 26, பேத்தி கனிஷ்கா, 3, மற்றும் ஒன்றரை வயது ஆண் குழந்தை என ஐந்து பேரும் ஒரே பைக்கில் சென்றனர். பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், கோவில்பாளையத்தில் சர்வீஸ் ரோடு அருகே சென்ற போது, எதிரில், கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி, சென்ற கார் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில், சம்பவ இடத்திலேயே முருகேஷ் மற்றும் கனிஷ்கா இறந்தனர். மற்ற மூவரும் படுகாயமடைந்தனர். அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பினர். விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். விசாரணையில், விபத்துக்கு காரணமான எலக்ட்ரிக் காரை ஓட்டி வந்தது, கோவை காமராஜர் புரத்தை சேர்ந்த ராஜ், 60, என்பது தெரியவந்தது. போலீசார் காரை பறிமுதல் செய்து, ராஜை கைது செய்தனர். போலீசார் கூறுகையில், 'கோவில்பாளையம் சர்வீஸ் ரோட்டில் இருந்து, ஒரே பைக்கில் மூன்று பெரியவர்கள், இரு குழந்தைகளுடன் பயணித்துள்ளனர். ெஹல்மெட் அணியவில்லை. பிரதான ரோட்டில் இணைந்த போது, எதிரே வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Gopalakrishnan.PY. Gopalakrishnan.PY.
நவ 10, 2025 04:19

உயர் தொ ழில் நுட்ப கருவி ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் பொருத்தினால் தவறான செயலை தடுக்கலாம். ரோபோட் போன்ற மனித உருவங்களை உருவாக்கும் தொழில் நுட்பம் வளர்ந்தால் வாகனங்கள் கண்காணிப்பு செய்து தடுக்க முடியும். அத்தகய ரோபோட் கள் லஞ்சம் கேட்காது, மிரட்டல்கள், பதவி பலம், பரிந்துரைகளை ஏற்காது விபத்துகள் குறையும்.


Paramasivam Ravindran
நவ 08, 2025 17:00

மிகவும் சோகமான சம்பவம். ஒரே இரு சக்கர வாகனத்தில் ஐந்து நபர்கள் செல்வது முற்றிலும் தவறான செய்கை. இருவர் மட்டுமே செல்வதற்கு அனுமதி. இப்படிப்பட்ட செயல்கள் விலை மதிப்பற்ற உயிர்கள் பலி ஆவதற்கு ஒரு காரணம்.


புதிய வீடியோ