மேலும் செய்திகள்
மரங்கள் நடுவதற்கு இடமில்லை
28-Jan-2025
சாலை விரிவாக்கத்தில் மரங்களை காப்பாற்ற 'களம்'
21-Jan-2025
அன்னுார்; அன்னுார் அவிநாசி சாலையில், நுாற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதால் பசுமை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள ஆட்டையாம்பாளையத்தில் துவங்கி, நம்பியம்பாளையம், கருவலூர், கஞ்சப்பள்ளி, அன்னுார், பொகலூர் வழியாக மேட்டுப்பாளையம் வரை 38 கி.மீ., தூரத்திற்கு சாலை அகலப்படுத்தும் பணி துவங்கி உள்ளது.தற்போதுள்ள 23 அடி சாலைக்கு பதில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. 255 கோடி ரூபாயில் மூன்று கட்டங்களாக இப்பணி நடைபெற உள்ளது. இதற்காக சாலையின் இருபுறமும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் திட்டமிட்டுள்ளனர்.கோவை மாவட்டமும் திருப்பூர் மாவட்டமும் சந்திக்கும் நரியம்பள்ளியில் துவங்கி கஞ்சப்பள்ளி, ஊத்துப்பாளையம், குன்னத்தூராம் பாளையம், சோமனுார் பிரிவு வரை ஏராளமான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன. இது குறித்து பசுமை ஆர்வலர்கள் கூறியதாவது : 50 முதல் 100 ஆண்டுகளுக்கு மேலான இந்த மரங்களை நெடுஞ்சாலை துறையினர் வெட்டி அகற்றி வருகின்றனர். இதனால் நிழலுக்கு ஒதுங்க கூட முடியாத நிலை அவிநாசி சாலையில் ஏற்படும்.மரங்களை வெட்டி அகற்றும் போதே சாலையின் வெளிப்புறமாக மரக்கன்றுகள் பாதுகாப்பு வேலியோடு அமைக்க வேண்டும். சில மரங்களை மட்டும் மறு நடவு செய்வதாக அதிகாரிகள் கூறுகின்றனர். 95 சதவீத மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன. அரசு உடனடியாக சாலையோரத்தில் மீண்டும் மரக்கன்றுகள் நட வேண்டும்.இவ்வாறு பசுமை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
28-Jan-2025
21-Jan-2025