உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஜி.ஆர்.ஜி. நிறுவனர் தின கொண்டாட்டம்

 ஜி.ஆர்.ஜி. நிறுவனர் தின கொண்டாட்டம்

கோவை: ஜி.ஆர்.ஜி. அறக்கட்டளையின் நிறுவனர் தின கொண்டாட்டம், பீளமேடு, பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரியில் நடந்தது. தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். சென்னை, ரானே மெட்ராஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கவுசி, தொழில் மற்றும் சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பை பாராட்டி, சந்திரகாந்தி கேட்டலிஸ்ட் லீடர் விருது வழங்கப்பட்டது. இந்தியாவின் டிஜிட்டல் மற்றும் தொழில்முனைவோர் துறையில் ஆற்றிய முன்னோடிப் பங்களிப்பிற்காக, மேட்ரிமோனி காம் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் முருகவேலுக்கு ஜி.ஆர்.ஜி. டிரெயில்பிளேசர் விருது வழங்கப்பட்டது. எதிர்கால பெண் தலைவர்களை வளர்க்கும் நோக்கத்துடன் பெண்களின் தலைமைத்துவத்திற்கான சந்திரகாந்தி பெலோஷிப் திட்டம் தொடங்கப்பட்டது. யு.ஆர்.சி. கன்ஸ்ட்ரக்ஷன் நிர்வாக இயக்குனர் தேவராஜன், ஜி.ஆர்.ஜி. அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ரங்கசாமி, நிறுவன அறங்காவலர் நந்தினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை