இன்று நடக்கிறது குறைதீர் கூட்டம்
கோவை; மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி தலைமையிலும், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையிலும் செவ்வாய்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.அதன்படி, இன்று காலை, 11:00 முதல் மதியம், 1:00 மணி வரை குறைதீர் கூட்டம் நடைபெறும் நிலையில், குடிநீர், ரோடு, பாதாள சாக்கடை, தொழில் வரி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சார்ந்த புகார்கள், தேவைகள் குறித்து மக்கள் மனுக்களாக அளிக்கலாம். துறை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.