உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரேஷன் கடையில் விற்பனை ஆகாத மளிகை பொருட்கள்

ரேஷன் கடையில் விற்பனை ஆகாத மளிகை பொருட்கள்

கோவை; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கூட்டுறவு சங்க அங்காடிகளில் மிளகாய் துாள், மஞ்சள் துாள், மல்லித்துாள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு விற்பனை செய்யப்பட்டது.எதிர்பார்த்த அளவுக்கு, இந்த மளிகை தொகுப்ப விற்பனை ஆகவில்லை. இதனால் பெரும்பாலான பொருட்கள் தேங்கி விட்டன. இந்த தொகுப்பில் இருந்த பொருட்கள், ரேஷன் கடைகளில் வைத்து சில்லரை விலையில் விற்பனை செய்யப்பட்டன.அங்கும் ரேஷன் கார்டுதாரர்கள், இந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. அதனால் ரேஷன்கடைகளில் ஸ்டாக் வைக்கப்பட்டு இருப்பதாக, ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.மாவட்ட கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் ராஜேந்திரன் கூறுகையில், ''கோவையில் உள்ள கூட்டுறவு சங்க விற்பனை அங்காடிகளுக்கு, 5,000 தொகுப்புகள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. இதில் 90 சதவீதம் பொருட்கள் விற்பனையாகி விட்டன. ரேஷன் கடைகளில் விற்பனையாகாமல் மீதம் இருந்த பொருட்களை, திரும்ப பெற்றுக்கொண்டு விட்டோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ