மேலும் செய்திகள்
கிரிக்கெட் அகாடமி துவக்க விழா
07-Aug-2025
கோவை ;டி.என்.பி.எஸ்.சி நடத்திய 2025ம் ஆண்டுக்கான குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளில் வெற்றி பெற்ற கோவை சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமியின் 45 மாணவர்களுக்கு, பாராட்டு விழா அகாடமியின் கிராஸ் கட் ரோடு கிளையில் நடந்தது. கோவை மாநகர வடக்கு காவல் துணை கமிஷனர் தேவநாதன், வெற்றியாளர்களைக் கவுரவித்தார். அவர் பேசுகையில், ''அரசு அதிகாரியாக, ஒரு கோப்பில் நீங்கள் போடும் ஒவ்வொரு கையெழுத்தும் பலரது வாழ்க்கையை மாற்றும் திறன் கொண்டது. ''எப்போதும் ஒரு நிமிடம் சிந்தித்து, சரியானதைச் செய்யுங்கள், என்றார். சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமியின் கோவை கிளை தலைவர் அருண், தனது மாணவர்கள் மற்றும் ஒன்பது ஆசிரியர்கள் தற்போது தமிழக அரசு அதிகாரிகளாகி இருப்பது, மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார். தலைமை நிர்வாக அதிகாரி யாஸ்மி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
07-Aug-2025